ஞாயிறு, 28 டிசம்பர், 2008

Life is beautiful

Life Is Beautiful படம் பார்த்தேன். இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த படம். அச்சமயத்தில் தான் படும் கஷ்டங்கள் தன் குழந்தையின் மனதை பாதிக்காத வண்ணம், அதை ஒரு விளையாட்டு போன்ற எண்ணத்தை அதன் மனதில் ஏற்படுத்துகிறார் தந்தை. அற்புதமான படம்.


நான் சொல்ல வந்த விஷயம் இந்த படத்தைப் பற்றி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்து வெளிவந்த 'யூத்' படத்தைப் பற்றி. அந்த படத்தில் காட்டப்படும் அநேக காட்சிகள் 'Life is Beutiful' படத்தில் இருந்து உருவப்பட்டவை. தொப்பியை மாற்றும் காட்சிகள், கடவுளை கேட்டு எல்லாவற்றையும் பெரும் நகைச்சுவை காட்சிகள் அனைத்திற்கும் மூலம் இந்த திரைப்படம் தான்.

இந்த திருட்டுச்செயல்கள் காலம் காலமாக நடந்து வருபவை தான் என்றாலும், தமிழ்ப் படைப்பாளிகளின் இந்த போக்கு என்னை வெட்கி தலைகுனிய வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக