புதன், 31 டிசம்பர், 2008

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம்

தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம். தற்போது அந்த வீட்டில் ஒரு நூலகம் அமைத்து பராமரித்து வருகிறார்கள். அதிக எண்ணிக்கையில் நூல்களைக் கொண்டு செம்மையாக செயல்பட்டு வருகிறது அந்த நூலகம். அவர் ஒரு பெரிய வணிகராக இருந்த போதிலும், வீடு சிறியதாகத்தான் இருக்கிறது. தனது செல்வங்களை ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கினார் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.














10 கருத்துகள்:

  1. ஒரு நல்ல போராளி என்றே சொல்லவேண்டும்.. இவரும் அடித்து கேட்டால் தான் கிடைக்கும் என்று நினைத்து இருக்கிறார்.. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாணிபம் செய்ததே மிகபெரிய சாதனை.. நான் இவருக்கு தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கப்பலோட்டிய தமிழனுக்கு என் வாழ்த்துக்கள்

    http://www.alampallam.com

    பதிலளிநீக்கு
  3. அவர் ஆரம்பித்த கப்பல் நிறுவனம் தொடர்ந்து செயல் படாமல் போனது வருத்தத்திற்குரிய விசயம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழனின் / இந்தியனின் வீரம் இன்று எங்கே காணமல் போனது ? ஒரு அரசையே எதிர்த்து கப்பல் விட்ட மாவீரன் எங்கே ...இன்று நாம் எங்கே ?
    நூற்றண்டு அடிமை வாழ்வு வீரத்தை /தியாகத்தை தொலைத்து விட செய்ததோ ?
    நம் விவேகம் இன்று அந்நிய மண்ணில் விலை போகிறது ஏனென்றால் நம்மை நாமே சுரண்டும் நிலை ...
    என்று மாறும் இந்த நிலை ..நெஞ்சு பொறுக்குதிலையே ..

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8 மே, 2014 அன்று PM 3:51

    Karthiikeyan

    Miga sirantha manithar...

    பதிலளிநீக்கு