புதன், 31 டிசம்பர், 2008

தூத்துக்குடி கடற்கரை










தொப்பை நீக்கம்!


அறுத்து எடுத்துவிடுவார்களோ என்னவோ?!

வீரபாண்டி கோட்டையிலே!

மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே குறுக்குச்சாலை என்னும் ஊருக்கு அருகே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கோலோச்சிய பாஞ்சாலங்குறிச்சி. 36 ஏக்கரில், 36 அடி உயர மதில் சுவர்களுக்குள் கம்பீரமாக காட்சி தந்த கோட்டையிலும் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திலும் தற்போது எஞ்சி இருப்பது தரைமட்டமான சிதிலங்கள்தான். வெள்ளையர்கள் கோட்டையும் மதில் சுவர்களையும் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

தமிழக அரசு அங்கே ஒரு நினைவிடத்தை எழுப்பி பராமரித்து வருகிறது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தைய கோட்டையின் தரைப்பகுதி மட்டும் தற்போது மிச்சமுள்ளது. அதைச் செப்பனிட்டு பராமரிக்கும் வேலையை தொல்பொருள் ஆய்வுக்கழகம் மேற்கொன்டு வருகிறது. திருச்செந்தூரை நோக்கி செல்லும் 2 மைல் நீள சுரங்கப்பாதையின் முகப்பையும் காணலாம். அந்த பாதை தற்போதும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.





சுரங்கப்பாதையின் முகப்பு:









தர்பார் இருந்த இடம்:

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம்

தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம். தற்போது அந்த வீட்டில் ஒரு நூலகம் அமைத்து பராமரித்து வருகிறார்கள். அதிக எண்ணிக்கையில் நூல்களைக் கொண்டு செம்மையாக செயல்பட்டு வருகிறது அந்த நூலகம். அவர் ஒரு பெரிய வணிகராக இருந்த போதிலும், வீடு சிறியதாகத்தான் இருக்கிறது. தனது செல்வங்களை ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கினார் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.














மகாகவி பாரதியாரின் வீடு

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், மதுரையிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் இருக்கும் எட்டயபுரத்தில் இருக்கிறது மகாகவி பாரதியார் பிறந்த வீடு. பாரதியாரைப் போற்றும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு முறை இங்கு சென்று வர வேண்டும். அவர் உலாவிய தரையையும் சாய்ந்த சுவர்களையும் தொட்டுப்பார்ப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம்!
















செவ்வாய், 30 டிசம்பர், 2008

தேங்காயும் clutch plate-டும் - II

உறவினர் வீட்டிற்குச் செல்லும் போது செய்ய வேண்டிய சடங்குகளான நலம் விசாரித்தல், சிரித்துப் பேசுதல், குழந்தையைக் கொஞ்சுதல், அன்பளிப்பு அளித்தல், வயிற்றுக்கு ஈதல் முதலியன முடித்துவிட்டு இரவு ஏழேமுக்கால் மணிக்கு பழனியிலிருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டுனர் பாலு ஏனோ அவர்கள் வீட்டில் உணவருந்தவில்லை. திண்டுக்கல் வருவதற்கு சற்று முன்பு அம்மாவிடம் தொலைபேசி நாங்கள் இருக்குமிடத்தைத் தெரிவித்துவிட்டு இரவு பதினோரு மணிக்கு முன்பாக வீடு வந்தடைய வாய்ப்பு இருப்பதாகக் கூறினேன். திண்டுக்கல் நகர எல்லையைத் தாண்டிய பின்பு ஒரு இரவு நேர உணவு விடுதி அருகே தான் சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினார் பாலு. சாப்பிட்டுவிட்டு கிளம்பியபோது நேரம் இரவு 9.30 மணி.

வண்டி ஓட தொடங்கியதும் 'க்வில்ச்' 'க்வில்ச்' என்று சத்தம். நான் அந்த சத்ததில் இருந்த இசையை ரசித்தேன். அது முன்னறிவித்த சங்கடங்களையும் ரசனையுடன் எதிர்பார்த்தேன். பாலு வண்டியின் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் சத்தத்திற்கான காரணத்தை தன் இருக்கையிலுருந்தே கண்டுபிடிக்க முயன்றார். சிறிது நேரத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டு வண்டியை ஓரம்கட்டினார். அம்பாஸிடரின் தொப்பையைத் திறந்து ஏதொ துழாவிவிட்டு "ஃபேன் பெல்ட் லூஸா இருக்குங்க. டைட் பண்ணினா சரியாப்போயிடும்" என்றார். வண்டியினுள் கவலை ரேகைகள் படர்ந்தன.

குறைந்த வேகத்தில், மெக்கானிக் கடை ஏதேனும் தென்படுகிறதா என்று இருபக்கமும் பார்த்துகொன்டே பயனித்தோம். தொடர்ந்து பீதியைக் கிளப்பிக்கொண்டேயிருந்த சத்தம் திடீரென்று நின்றது. இதற்கு சந்தோஷப்பட வேண்டுமா வருத்தப்பட வேண்டுமா என்று ஒருவருக்கும் புரியவில்லை. வண்டியை வேகமெடுத்தார் பாலு. அந்த தெம்பில் வழியில் திறந்திருந்த ஒரு கார் ரிப்பேர் கடையை கண்டும் காணாமல் விட்டுவிட்டேன். பாலுவிடமும் சொல்லவில்லை. அடுத்த பத்தாவது நிமிடம், "க்ளட்ச் வேலை செய்யவில்லை" என்று கூறி பதற்றத்துடன் பெடலை உதைத்தார் பாலு. 'க்ளீஈஈஈஈர்ர்ர்ர்ச்ச்ச்'. வண்டி நின்றுவிட்டது.


நான் சொல்ல விரும்பிய கதை இத்துடன் முடிகிறது. மேற்கொன்டு என்ன நடந்தது என்று அறிய விரும்புகிறவர்களுக்காக 'பிற்சேர்க்கை'யை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

தேங்காயும் clutch plate-டும் - I

பொள்ளாச்சி. மாலை 4 மணி. திருச்சியை நோக்கி கிளம்பியது எங்கள் கார். காரில் என் மனைவி, மாமனார், மாமியார், அவர்களது ஆஸ்தான ஓட்டுனர் பாலு மற்றும் நான். நாங்கள் கிளம்பிய தகவலை திருச்சியிலிருக்கும் என் அம்மாவிடம் கைப்பேசி மூலம் தெரிவித்தேன்.

"எத்தனை மணிக்கு வருவீங்க?"

பொதுவாக பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வர அதிகபட்சம் ஐந்து மணி நேரம் ஆகும். ஓட்டுனரையும் காரையும் கிண்டல் செய்யும் எண்ணத்தில், "நைட் 2 மணி" என்றேன்.

வெளியூர் பயணம் செல்லும் போது கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புவது அவர்கள் வீட்டில் வழக்கம். கருப்பண்ணசாமி கோவில் முன் வண்டி நின்றது. மாமனார் ஒரு தேங்காயால் கோவிலின் முன் செங்குத்தாக ஒரு வட்டம் வரைந்தார். பின் தரையை நோக்கி வேகமாக வீசினார். தேங்காய் உடையவில்லை. உருண்டு ஓடியது. "விடாதீங்க! உடைச்சிட்டு போங்க! அப்படியே விட்டுச்சென்றால் ஆகாது" சுற்றி இருந்த கடைக்காரர்கள் போதித்தார்கள். பாலு தேங்காயை துரத்தி சென்று கையில் எடுத்து ஒரு போடு போட்டார். மீண்டும் தப்பித்துக்கொண்டது. "குடுமியைப் பிய்த்துவிட்டுப் போட்டால்தான் உடையும்", தன் கணவருக்கு என் மாமியாரின் அட்வைஸ். மூன்றாவது முயற்சியில் சிதறின சில்லுகள்.

போகும் வழியில் பழனியில், என் அண்ணனுக்கு (பெரியம்மா மகன்) பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டுப் போவதாக திட்டம். குழந்தைக்கு துணி வாங்குவதற்காக உடுமலையில் நாங்கள் சென்ற கடையில்ஒரு சுவரஸ்யமான தள்ளுபடி திட்டம். வாடிக்கையாளர்களைக் கவர கற்பனைக்கும் எட்டாத பலவித திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்தக்கடையில் கடற்கரையில் சுடுவதற்காக வைத்திருப்பதைப்போல் பலூன்களைக்கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உடைக்கவேண்டுமாம். உள்ளே உள்ள கூப்பனுக்கு ஏற்றவாறு தள்ளுபடி தருவார்களாம். பலூனை உடைக்க ஒவ்வொரு பலூனின் மூக்கனாங்கயிற்றிலும் ஒரு ஊசியையும் கட்டி வைத்திருந்தார்கள். நான் ஒரு நீல நிற பலூனை எடுத்து வெடித்ததில், 5% என்று வந்தது. "5% பணம் தந்தால் போதுமா?" என்று கேட்டேன். "5% டிஸ்கௌண்ட் சார்" என்றார்கள்.

தொடரும்...

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

அபியும் அவுங்கப்பாவும்!

தந்தைப் பாசத்தைப் பிழிந்து ஊட்டும் தற்போதைய தமிழ் திரைப்பட 'trend'-ல் மற்றுமோர் வரவு 'அபியும் நானும்'. மகனுக்கு பதில் மகளை மையப்படுத்தி இருப்பதுதான் வித்தியாசம். ஆனால் அதுதான் படத்தின் சறுக்கலுக்கும் காரணமாகிறது.

மகன் என்றால் வேலையில், தொழிலில் வெற்றி, ராணுவ 'Major', 'heroism' எல்லாம். ஆனால் பெண் என்றால் காதலும் கல்யாணமும்தான் வெற்றியாம்! இது தமிழ்க் கதாநாயகிகளின் காலவரையற்ற சாபக்கேடா, இயக்குனர்களின் குறுகிய மனப்பான்மையா அல்லது கற்பனை வறட்சியா?

அழுகிறது ஆழியார்!

ஆழியார் - பெயரைச் சொன்னாலே மனசில் சிலுசிலுப்பை ஏற்படுத்தும் இடம். சரியான பராமரிப்பு இல்லாததால் அதன் அவலநிலையைக் கண்டு கண்ணீர் விடும் அங்கே இருக்கும் குழாய்கள்!


Life is beautiful

Life Is Beautiful படம் பார்த்தேன். இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த படம். அச்சமயத்தில் தான் படும் கஷ்டங்கள் தன் குழந்தையின் மனதை பாதிக்காத வண்ணம், அதை ஒரு விளையாட்டு போன்ற எண்ணத்தை அதன் மனதில் ஏற்படுத்துகிறார் தந்தை. அற்புதமான படம்.


நான் சொல்ல வந்த விஷயம் இந்த படத்தைப் பற்றி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்து வெளிவந்த 'யூத்' படத்தைப் பற்றி. அந்த படத்தில் காட்டப்படும் அநேக காட்சிகள் 'Life is Beutiful' படத்தில் இருந்து உருவப்பட்டவை. தொப்பியை மாற்றும் காட்சிகள், கடவுளை கேட்டு எல்லாவற்றையும் பெரும் நகைச்சுவை காட்சிகள் அனைத்திற்கும் மூலம் இந்த திரைப்படம் தான்.

இந்த திருட்டுச்செயல்கள் காலம் காலமாக நடந்து வருபவை தான் என்றாலும், தமிழ்ப் படைப்பாளிகளின் இந்த போக்கு என்னை வெட்கி தலைகுனிய வைக்கிறது.

இன்று ரசித்த ஒரு வாசகம்!


கண் கெட்ட பிறகு கதிரவன் வணக்கம்!

வியாழன், 25 டிசம்பர், 2008

Snapping the sun


















Thats the way they behaved - Always!!

http://www.rediff.com/news/2008/dec/25indian-held-in-pakistan-for-lahore-blast.htm
December 25, 2008 00:58 IST
Pakistani intelligence agencies on Wednesday night claimed to have arrested an Indian national in connection with the Lahore [Images] car bomb blast earlier in the day.
"The accused was identified as Munir alias Satish Anand Shukla, a resident of Kolkata," TV channels quoted police sources as saying.
Some of the reports claimed that the arrested had earlier worked with the Indian High Commission in London [Images].
A woman was killed and four persons were injured when a car bomb went off in a high-security residential complex for government officials in the eastern Pakistani city of Lahore.
The explosion occurred at 9.20 am within the Government Officers Residences complex, an area in the capital of Punjab province, where senior government officials and judges reside.

http://www.keesings.com/search?kssp_selected_tab=article&kssp_a_id=19835n01ind
Jan 1964 - Expulsion of Pakistani Diplomats from India and Indian Diplomats from Pakistan on Espionage Charges. - Pakistani Demand for Closing of Indian Diplomatic Office and Libraries in East Pakistan.
Following the arrest of an Indian Air Force officer, Pilot Officer P. N. Sharma, on charges of spying for Pakistan, three members of the staff of the Air Adviser to the Pakistani High Commissioner in New Delhi were arrested on Sept. 3, 1963. They were released on the following day and returned to Pakistan, together with the Air Attache. At the request of the Pakistani High Commissioner, Mr. Agha Hilaly, the Government of India agreed on Sept. 5 not to publish this information until he had had time to inform his Government. On Sept. 8, however, the Pakistani Government demanded the immediate recall of the Indian Air Adviser in Pakistan and three other members of the Indian High Commissioner's staff on the ground that they had organized a large-scale espionage network.

Towards and at Shivasamudram
























































Bangalore Mysore Highway






















FM is now!

I got DTH now and i get suryan FM, All India Radio and Rainbow FM-Chennai!! Happy listening!!

எம்.ஜி.ஆரின் இரங்கற்பாவில் வாலி

புரட்சித் தலைவனே!
நீ இருந்தபோது -
உன்
அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...

இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து
நாடு அழுதது!

சீட்டாடும் உலகம் - விவேகா

எல்லோரையும்
சீட்டாடிக்கொண்டிருக்கிறது உலகம்.

தேவைப்பட்டால்
ரம்மிக்குள் வைத்துப் போஷிக்கவும்
பக்கபலமற்ற உதிரியெனில்
வெளிவீசவும் தயங்குவதில்லை.

தனதேதிர் உள்ள ராஜாவோ ராணியோகூட
ஜோக்கராகிவிட்டால்
கும்மாளமிடுகிறது.

தேவையில்லை எனில்
இதயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு
வைரங்களைப் பொறுக்கும் வழக்கமுடையது.

யாரோ ஒருவரைக் கவிழ்த்துதான்
ஒரு வெற்றி காட்டப்படுகிறது!

செவ்வாய், 9 டிசம்பர், 2008

Online FM

I like to hear Tamil radio programs. There is no dearth of Tamil radio stations. But in Bangalore, which is where I live, no Tamil radio staions are aired. Of course, there are umpteen number of online music broadcast services (they are not radio stations in the strictest sense :) ). Most of them are just a playlist going on infinite loops. There is no life in them. At the time of writing, the online broadcast service that I will rate the best is that of Srilanka based radio station Shakti FM. I've been an ardent listener of Shakthi FM for long time and quality of programs is really high. Kalasam FM broadcast from Canada is my second best choice. Their programs are extremely entertaining, encompassing a wide variety of programs for a radio service and also they give a lot of interesting trivia. These are the only two stations among countless online stations broadcast from all around the globe, that are worth mentioning.


Having said that, they cant provide the same feeling one has when listening to a station that is broadcast from our very own hometown. Those programs that are exactly catered to meet the interests of the locals. I've been missing online broadcast of Tamilnadu based radio stations for five years now. From the present scenario, it looks like its not going to happen in the near future.

The only online channel from Tamilnadu is Aha FM from Chennai and the quality of their programs are supremely inferior. Suryan FM was available for few months until a few months ago and it was stopped suddenly. Their website says 'Online broadcast section is under construction'. When they aleady have an established system for online braodcasting I cant think of any reason to take the system offline and construct it all over again!

Radio Mirchi is another station which I love to hear online. They have online broadcast for Mumbai and I wonder what prevents them from extendng the service for other cities, especially when there are a huge number of die hard fans dying to listen them. I keep gettin mails from Radio mirchi that so snd so city's radio mirchi station has now got a website on its own. Actually they are nothing but dead pages all having the same content except for the name of the city. Why would a station popularize itslef like this??

In spite of knowing that it will not be useful, I have taken an action instead of just cribbing. Of course the best I can do is to send them a mail in this regard and requested them to provide online feed of their programs.


I'm waiting for a day when i can be transported to my hometown as soon as I close my eyes.